இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்-. உடல் நலம் சீராகும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

மிதுனம்: விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீடு வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

துலாம்: நீண்டகால பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல் உஷ்ணத்தால் சில அவஸ்தைகள் ஏற்படக் கூடும்.

தனுசு: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். நிலம் தொடர்பான பிரச்சினைக்கு முடிவு ஏற்படும்.

மகரம்: உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

மீனம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும். கலைப்பொருட்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

34 mins ago

ஆன்மிகம்

42 mins ago

இந்தியா

46 mins ago

உலகம்

33 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

5 hours ago

மேலும்