இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையை சமாளித்து விடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

மிதுனம்: மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

துலாம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். இழுபறியாக இருந்துவந்த தொகை வசூலாகும்.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை காட்டுவது நல்லது. யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம், மின்சாதனங்கள் வாங்குவீர்கள். அடுத்தடுத்த செலவுகளால் சேமிப்பு கரையும்.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களை சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். ஆன்மிக பயணம் செல்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

42 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்