இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை எளிதில் முடிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: மனைவிவழியில் மதிப்பு கூடும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் எரிச்சலை ஏற்படுத்தும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மனச்சோர்வு, பதற்றம் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரியமானவருடன் திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வதற்கான திட்டம் தீட்டுவீர்கள்.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவு எடுப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

மீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்