இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கொஞ்சம் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கி சுமுக நிலை காணப்படும்.

மிதுனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைபடி சொத்து பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார்.

கடகம்: இழுபறியாக இருந்துவந்த சில காரியங்கள் முழுமையடையும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: வீண் அலைச்சல், பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வரலாம். எச்சரிக்கை தேவை.

கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு ஆடை ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள். பயணம் உண்டு.

துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது குறித்து யோசிப்பீர்கள்.

விருச்சிகம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். விஐபிக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

தனுசு: அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் வகையில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கும்பம்: முயற்சிகள் வெற்றியடையும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்: எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுங்கள். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்