இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப் படுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பணவரவு உண்டு.

சிம்மம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர் தம்பதிக்குள் அனுசரித்து போவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

கன்னி: நண்பர்கள் உதவியுடன் உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்குவீர். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

துலாம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்: தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனது காயப்படும் படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். தாயார் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள்.

தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் அடையலாம். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்
கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பணிகள் நிறைவுபெறும்.

மீனம்: மனக் குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பிறரை எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

17 mins ago

ஆன்மிகம்

34 mins ago

ஆன்மிகம்

42 mins ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்