இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். சிலரின் தவறான போக்கை எண்ணி வருந்துவீர்கள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவு திருப்தி தரும். பழைய கடன் தீர வழி கிடைக்கும்.

ரிஷபம்: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களின் சந்திப்பு நிகழும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: பழைய கடனை பைசல் செய்வீர்கள். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்.

கடகம்: தொடர்கதையாக இருந்த தடைகள் நீங்கும். உறவினர், நண்பர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். முன்கோபம் விலகும். எதிர்காலம் பற்றி சிந்திப்பீர். புதிய தொழில் தொடர்பான பணிகள் சுமுகமாக முடியும்.

சிம்மம்: குடும்பத்தில் சீமந்தம், கிரஹப்பிரவேசம் என்று கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.

கன்னி: சோம்பல், அசதி, உடல் வலி நீங்கும். தடைபட்ட வேலைகளை உடனே முடிப்பீர்கள். கோபம் தணியும். தேவையற்ற குழப்பங்கள் இன்று தீரும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்: இரண்டு - மூன்று நாட்களாக முடியாமல் இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அக்கம் - பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

விருச்சிகம்: தேவையற்ற, ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும். தம்பதிக்குள் மனஸ்தாபம் வந்து விலகும். ஓய்வெடுக்க
முடியாத அளவுக்கு பணிச்சுமை இருக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பர்.

தனுசு: நம்பிக்கைக்கு உரியவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. யோகா, தியானம், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கலை பொருள் சேரும்.

மகரம்: பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். தாய்வழி உறவினர்க
ளால் நன்மையுண்டு. பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உண்டு.

கும்பம்: கலகலப்பாக சிரித்து பேசும் சூழல் அமையும். வாகனப் பழுது நீங்கும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டம் விரியும். இழுபறி காரியங்கள் ஒவ்வொன்றாக நடந்தேறும்.

மீனம்: வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் வரும். தந்தைவழி உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தோற்றப் பொலிவு கூடும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 mins ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்