இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்: சாதுர்யமாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும்.

மிதுனம்: அனுபவ அறிவால் சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

கடகம்: சிறுசிறு அவமானம், வீண் விரயம் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுங்கள்.

சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திடீர் பயணம் உண்டு.

கன்னி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

துலாம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: உங்களின் நிர்வாகத் திறன் பளிச்சிடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் பயத்தை போக்க முயற்சிப்பீர்கள்.

தனுசு: வெளியூர் பயணம் வெற்றிகரமாக அமையும். சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவி இடையே அன்பு மேலோங்கும்.

மகரம்: உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

கும்பம்: வேலைச்சுமை, நண்பர்களுடன் எதிர்பாராத நெருடல் வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருக்கும்.

மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வாகனம் செலவு வைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்