‘ஹர்’ , ‘கேப்டன் பிலிப்ஸ்’ திரைக்கதை ஆசிரியர்களுக்கு விருது

By செய்திப்பிரிவு

சிறந்த திரைக்கதைக்கான ரைட்டர்ஸ் கில்டு விருது எழுத்தாளர் ஸ்பைக் ஜோன்ஸி எழுதிய “ஹர்”, பில்லி ரே எழுதிய “கேப்டன் பிலிப்ஸ்” ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களுக்கு கிடைத்துள்ளன.

கணினியோடு மனிதனுக்கு உள்ள உறவை மையமாக வைத்து “ஹர்” திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. தன் காதலை வெளிப்படுத்த இயலாத நாயகன், கணினியை மானசீகமாக காதலிக்கிறான். இந்தப் படத்தின் நாயகனாக ஜேக்குலின் பீனிக்ஸ் நடித்துள்ளார்.

சிறந்த திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருது, கிரிடிக்ஸ் சாய்ஸ் விருது, ஏஎப்ஐ விருது உள்பட பல்வேறு விருதுகளை “ஹர்” ஏற்கெனவே வென்றுள்ளது. இதேபோல் பில்லி ரே திரைக்கதை எழுதிய “கேப்டன் பிலிப்ஸ்” திரைப்படத்துக்கு மாற்று திரைக்கதை வரிசையில் விருது கிடைத்துள்ளது. சோமாலிய கடற் கொள்ளையர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் டாம் ஹாங்ஸ், சரக்குக் கப்பல் கேப்டனாக நடித்துள்ளார். சரக்குக் கப்பலுடன் கடற்கொள்ளையர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.

இந்தத் திரைப்படத்தின் கதாசிரி யர் பில்லி ரே, திரைக்கதை எழுத்தாளர் மட்டுமல்ல, அமெரிக்காவின் சிறந்த நாட்டுப்புற பாடகரும் ஆவார். அவரது மகள் மைலி சைரஸ் புகழ்பெற்ற பாப் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நாடகங்கள் வரிசையில் பிரேக்கிங் டாட், நகைச்சுவை வரிசையில் ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் ஆகியவை விருதுகளைப் பெற்றன. இந்த தொடர் நாடகங்களை பல்வேறு நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாசிரியர்கள் எழுதியுள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் எழுத்தாளர்கள் ஸ்பைக் ஜோன்ஸி, பில்லி ரே, வின்சி கில்லிகன் உள்பட பலருக்கு ரைட்டர்ஸ் கில்டு விருதுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

32 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

40 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

46 mins ago

ஆன்மிகம்

56 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்