தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உபா சட்டத்தை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் :

தந்தை பெரியார்  திராவிடர் கழகத்தினர் உபா சட்டத்தை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கியூ பிரிவு போலீஸாரின் அத்துமீறலை கண்டித்தும், மக்கள் விரோத உபா சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.

தலைமைக் குழு உறுப்பினர் மு.தமிழ்ப்பித்தன், மாவட்ட தலைவர் மா.மாயாண்டி, மாவட்ட செயலாளர் பி.விடுதலை சேகர், மாவட்ட அமைப்பாளர் ச.கிட்டுராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வாஞ்சிநாதன் உட்பட பல்வேறு அமைப்பினர் பேசினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in