காஞ்சியில் லாரி மோதி 2 பெண்கள் உயிரிழப்பு :

காஞ்சியில் லாரி மோதி 2 பெண்கள் உயிரிழப்பு :
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாநகராட்சி நாகலுத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் காஞ்சிபுரத்தை அடுத்த காரப்பேட்டை பகுதியில் தனியார் கேஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வீட்டுக்கும், தான் பணிபுரியும் இடத்துக்கும் நீண்ட தூரம் என்பதால் காரப்பேட்டை பகுதியில் இவர் வாடகை வீடு பார்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குடிபெயர இருக்கும் வீட்டைப் பார்க்க பாபுவின் மனைவி சங்கீதா(26), தனது வீட்டின்பின்புறம் குடியிருக்கும் தோழி நீலவேணியுடன் சென்றார். காரப்பேட்டைஅருகே சென்னை - பெங்களூர் தேசியநெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது காஞ்சிபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி மளிகை பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிஇவர்கள் மீது மோதியது. இதில்இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த காஞ்சிதாலுக்கா போலீஸார் உடல்களைஉடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணை நடைபெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in