பைக் பேரணிக்கு வரவேற்பு :

பைக் பேரணிக்கு வரவேற்பு :
Updated on
1 min read

தேச ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ்நாடு சிறப்பு காவல்படை தளவாய் அந்தோனி ஜான்சன் தலைமையில் 25 போலீஸார் விழிப்புணர்வு பேரணி மேற் கொள்கின்றனர்.

குமரியிலிருந்து மோட்டார் சைக்கிள்களில் போலீஸார் திருநெல்வேலி வந்த போது, பாளையங் கோட்டையிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல்துறை ஆணையர் என்.கே. செந்தாமரைக்கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன், மாநகர காவல் சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் டி.பி. சுரேஷ்குமார், குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் கே. சுரேஷ்குமார், கூடுதல் காவல் துணை ஆணையர் சங்கர் உள்ளிட்டோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in