வேலூரில் : கஞ்சா விற்ற இளைஞர் கைது :

வேலூரில் : கஞ்சா விற்ற இளைஞர் கைது :
Updated on
1 min read

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் வடக்கு காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆற்காடு பேருந்துகள் நின்று செல்லும் இடத்தின் அருகேயுள்ள உணவகம் பகுதியில், வேலூர் வள்ளலார் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (34) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரி யவந்தது.

இதையடுத்து, வடக்கு காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in