பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு :

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு  :
Updated on
1 min read

வேலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தி.மலை மாவட்டம் சந்த வாசலைச் சேர்ந்தவர் காளியப்பன் என்பவரது மனைவி புஷ்பா (45). இவரது மகள் உஷா. இருவரும் இரு சக்கர வாகனத்தில் கீழ் அரசம்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். கீழ்வல்லம் சிங்கிரி கோயில் சாலையில் சென்றபோது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் உஷாவின் வாகனத்தின் மீது மோதினர். இதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, புஷ்பா அணிந்தி ருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் புஷ்பா அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in