223 - ஆலங்குளம்

223 - ஆலங்குளம்
Updated on
3 min read

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
மனோஜ் பாண்டியன் அதிமுக
பூங்கோதை ஆலடி அருணா திமுக
எஸ்.ராஜேந்திராநாதன் அமமுக
எஸ்.செல்வக்குமார் மக்கள் நீதி மய்யம்
மு.சங்கீதா நாம் தமிழர் கட்சி

ஆலங்குளம் தாலுகா, அம்பாசமுத்திரம் தாலுகாவின் ஒரு பகுதி, ஆழ்வார்குறிச்சி, முக்கூடல் பேரூராட்சிகள் மற்றும் 22 ஊராட்சிகளை உள்ளடக்கியது இத்தொகுதி. விவசாயம், பீடித் தொழில் இத்தொகுதி மக்களின் முக்கியத் தொழிலாக உள்ளன. இத்தொகுதியில் பரவலாக நாடார், கோனார், தேவர், யாதவர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காய்கறி உற்பத்தி பிரசித்தம். இங்கு உற்பத்தியாகும் காய்கறிகள் கேரளத்துக்கு பெருமளவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் விவசாயம், அதை சார்ந்த தொழில்களில் இத்தொகுதியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ஆலங்குளம் தாலுகா

அம்பாசமுத்திரம் தாலுகா (பகுதி)

கடையம் பெரும்பத்து, கீழகடையம், வடக்கு அரியநாயகிபுரம், பாப்பாக்குடி, காசிதர்மம், இடைகால், தெற்குமடத்தூர், அயன் பொட்டல்புதூர்-மி, தெற்குகடையம், இரவணசமுத்திரம், கோவிந்தபேரி, அயன் தர்மபுர மடம், சிவசைலம், வீரசமுத்திரம், பாப்பான்குளம், செங்குளம், ரெங்கசமுத்திரம், பனஞ்சாடி, பள்ளக்கால், அடைச்சாணி, கீழ ஆம்பூர், மற்றும் மேல ஆம்பூர் கிராமங்கள்.

ஆழ்வார்குறிச்சி (பேரூராட்சி) மற்றும் முக்கூடல் (பேரூராட்சி).

தொகுதி பிரச்சினைகள்

அரிசி ஆலைகள், காய்கறி சந்தை என்று ஆலங்குளம் தொகுதியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் இருந்தாலும் உரிய முன்னேற்றம் இல்லை. விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் நிறைந்துள்ள இத்தொகுதியில் கூலி உயர்வு கேட்டு பீடித்தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கதையாகிவிட்டது.

இங்கு சாகுபடி செய்யப்படும் மிளகாய், கத்தரி, வெண்டை, வெங்காயம் ஆகியவை அண்டை மாநிலமான கேரளத்துக்கு தினமும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் சமீபத்தில் விவசாயத்துக்கு அச்சுறுத்தலாக காற்றாலைகள் ஆங்காங்க பெருகிவருகின்றன. ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக்க தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டாலும் இன்னும் மருத்துவமனைக்குத் தேவையான எந்த மேம்பாடுகளும் செய்யவில்லை.

ஆலங்குளத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அதிமுக அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆலங்குளத்தில் காய்கறி பதப்படுத்தும் நிலையம் அமைக்கும் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ராமநதி, கடனா நதி அணைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியவில்லை.

தேர்தல் வரலாறு

கடந்த 1952 முதல் 2016 வரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக, காங்கிரஸ் தலா 4 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காந்தி காமராஜ் காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளர்கள் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். 2006 தேர்தலில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவும், 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.ஜி.ராஜேந்திரனும், 2016 தேர்தலில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவும் வெற்றி பெற்றனர்.

கடந்த 2016 தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பூங்கோதை ஆலடி அருணா 88,891 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவருக்கு அடுத்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த கார்த்திகேயன் 84,137 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,19,444

பெண்

1,25,144

மூன்றாம் பாலினத்தவர்

-

மொத்த வாக்காளர்கள்

2,44,588

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

P.G.இராஜேந்திரன்

அதிமுக

2006

பூங்கோதை ஆலடி அருணா

திமுக

46.05

2001

P.G.இராஜேந்திரன்

அதிமுக

48.95

1996

V.அருணாசலம் (ஆலடி அருணா)

திமுக

46.1

1991

S.S.இராம சுப்பு

இ.தே.கா

62.69

1989

S.S.இராம சுப்பு

இ.தே.கா

28.57

1984

N.சண்முகைய்யா பாண்டியன்

அதிமுக

54.49

1980

R.நவநீத கிருஷ்ண பாண்டியன்

கா.கா.கா

53.88

1977

V.கருப்பசாமி பாண்டியன்

அதிமுக

28.43

1971

V.அருணாசலம் (ஆலடி அருணா)

திமுக

1967

V.அருணாசலம் (ஆலடி அருணா)

திமுக

1962

எஸ். செல்லபாண்டியன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1957

வேலுச்சாமித்தேவர்

சுயேச்சை

1952

சின்னத்தம்பி

இந்திய தேசிய காங்கிரஸ்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பூங்கோதை ஆலடி அருணா

தி.மு.க

62299

2

M. பாண்டிராஜ்

அ.தி.மு.க

55454

3

M. சிவகுமார்

பி.எஸ்.பி

6620

4

P. சாமிநாதன்

எ.ஐ.எப்.பி

4664

5

முத்துகுமாரசாமி

தே.மு.தி.க

2751

6

M. அருள்செல்வன்

பாஜக

2170

7

A. மீரன்

சுயேச்சை

1336

135294

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P.G. ரஜேந்திரன்

அ.தி.மு.க

78098

2

DR. பூங்கோதை ஆலடி அருணா

தி.மு.க

77799

3

S. சுடலையாண்டி

பி.ஜே.பி

2664

4

E. முருகேசன்

பி.எஸ்.பி

1234

5

N. ரஜேந்திரன்

சுயேச்சை

1099

6

S. தங்கராஜ்

சுயேச்சை

1058

7

R. ராமலிங்கம்

சுயேச்சை

924

8

G. பிரகாஷ்

சுயேச்சை

793

9

R. கேசவராஜ்

சுயேச்சை

629

10

M. முருகன்

சுயேச்சை

408

11

A. ஞான அருள்

சுயேச்சை

228

12

D. செல்வின்

சுயேச்சை

200

165134

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in