விருதுநகரில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

நலவாரிய பணப் பலன்களை இரட்டிப்பாக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பில் விருதுநகரில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டச் செயலாளர் தேவா தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் செல்லச்சாமி முன்னிலை வகித்தார்.

நலவாரிய ஆன்லைன் பதிவுகளை எளிமையாக்க வேண்டும். ஓய்வூதியத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும். பட்டாசு - தீப்பெட்டி தொழிலாளர் நலவாரியத்தை உடனே செயல்படுத்த வேண்டும். நலவாரிய பணப் பலன்களை இரட்டிப்பாக்க வேண்டும். பதிவு செய்தோருக்கு உடனடியாக நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in