

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், அதன் மாநில பொதுச் செயலாளர் தாஸ், தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை நேரில் சந்தித்து அளித்துள்ள மனுவில் குறிப் பிட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை நாடாளுமன்றத் தேர்தல் பணியில் நியமித்து, அதற்கான ஆணையை தற்போது தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. இதில், பெண் ஆசிரியர்களையும் நியமித்து வருகிறது.
குறிப்பாக, மகப்பேறு காலத்தில் உள்ள பெண் ஆசிரியர்கள், கைக் குழந்தை உள்ள பெண் ஆசிரியர்கள் மற்றும் அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றி ருப்பவர்களுக்கும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு பவர்களுக்கும், பெண் மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுகிறோம். மேலும், ஆண் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியாற்றி வரும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியி லேயே பணி வழங்க கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் துரை, மாநில மகளிரணி செயலாளர் கிருஷ்ண குமாரி உடன் இருந்தனர்.