

கரூர் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுடன், திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை சட்டப்பபேரவை தொகுதிகளை உள்ளடக்கியது கரூர் மக்களவை தொகுதி. 4 மாவட்டங்களில் பரவி கிடப்பதால் மிகப்பெரிய தொகுதியாக காட்சி அளிக்கிறது.
காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை கொண்ட இந்த பகுதியின் முதன்மையான தொழில் விவசாயம். கரூர் பகுதியில் உள்ள ஜவுளி ஆலைகளும் முக்கிய தொழில். மாட்டுக்கு மட்டுமின்றி முறுக்குக்கும் பெயர் பெற்ற மணப்பாறை இந்த தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளது.
மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பலமுறை போட்டியிட்ட தொகுதி. திமுகவிலும், சின்னசாமி, கே.சி பழனிசாமி என பிரபலமான வேட்பாளர்களே ஒவ்வொரு முறையும் களம் காண்கின்றனர். திராவிடக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களையே இந்த பகுதி மக்கள் தேர்வு செய்துள்ளனர். அதிமுக, திமுக என இருகட்சிகளுக்குமே செல்வாக்கு மிக்க தொகுதி இது.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
கரூர்
கிருஷ்ணராயபுரம் (எஸ்சி)
அரவக்குறிச்சி
வேடசந்தூர்
மணப்பாறை
விராலிமலை
தற்போதைய எம்.பி
தம்பிதுரை, அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
| அதிமுக | தம்பிதுரை | 540722 |
| திமுக | சின்னசாமி | 345475 |
| தேமுதிக | கிருஷ்ணன் | 76560 |
| காங்கிரஸ் | ஜோதிமணி | 30459 |
முந்தைய தேர்தல்கள்
| ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
| 1971 | கோபால், காங்கிரஸ் | ராமநாதன், ஸ்தாபன காங்கிரஸ் |
| 1977 | கோபால், காங்கிரஸ் | மீனாட்சி சுந்தரம், ஸ்தாபன காங்கிரஸ் |
| 1980 | துரை செபாஸ்டின், காங்கிரஸ் | கனகராஜ், அதிமுக |
| 1984 | முருகையா, காங்கிரஸ், | கந்தசாமி, திமுக |
| 1989 | தம்பிதுரை, அதிமுக | கே.சி பழனிசாமி, திமுக |
| 1991 | முருகேசன், அதிமுக | திருநாவுக்கரசு, திமுக |
| 1996 | நாட்ராயன், தமாகா, | தம்பிதுரை, அதிமுக |
| 1998 | தம்பிதுரை, அதிமுக | நாட்ராயன், தமாகா |
| 1999 | சின்னசாமி, அதிமுக | கே.சி.பழனிசாமி, திமுக |
| 2004 | கே.சி.பழனிசாமி, திமுக | ராஜா பழனிசாமி, அதிமுக |
| 2009 | தம்பிதுரை, அதிமுக, | கே.சி பழனிசாமி, திமுக |
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
கரூர் : விஜயபாஸ்கர், அதிமுக
கிருஷ்ணராயபுரம் (எஸ்சி) : கீதா, அதிமுக
அரவக்குறிச்சி : செந்தில் பாலாஜி, அதிமுக
வேடசந்தூர் : பரமசிவம், அதிமுக
மணப்பாறை : சந்திரசேகர், அதிமுக
விராலிமலை : விஜயபாஸ்கர், அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
மு. தம்பிதுரை (அதிமுக)
எஸ். ஜோதிமணி (காங்கிரஸ்)
என் தங்கவேல் (அமமுக)
ஹரிஹரன் (மநீம)
கருப்பையா (நாம் தமிழர்)