பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி
Updated on
1 min read

நீண்டகாலமாக ரிசர்வ் தொகுதியாக இருந்த பெரம்பலூர் தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு பொதுத்தொகுதியாக மாறியுள்ளது. திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா வென்ற தொகுதி இது.

பெருமளவு கிராமப்புறங்களை கொண்ட இந்த தொகுதியில் விவசாயம் மட்டுமே தொழில்.

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு பொதுத் தொகுதியானதுடன், அதில் இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் பலவும் வேறு தொகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டன.

பெரம்பலூரை தவிர திருச்சி மாவட்டத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளும், கரூர் மாவட்டத்தின் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியும் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

பெரம்பலூர் (எஸ்சி)

துறையூர் (எஸ்சி)

லால்குடி

முசிறி

மண்ணச்சநல்லூர்

குளித்தலை

தற்போதைய எம்.பி

மருதராஜா, அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுகமருதராஜா462693
திமுகசீமனூர் பிரபு249645
பாஜகபச்சமுத்து238887
காங்கிரஸ்ராஜசேகரன்31998

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1967துரையரசு, திமுகராமசாமி, காங்கிரஸ்
1971துரையரசு, திமுகஅய்யாகண்ணு, ஸ்தாபன காங்கிரஸ்
1977அசோக்ராஜ், அதிமுகராஜூ, திமுக
1980மணி, காங்கிரஸ்தங்கராஜூ, அதிமுக
1984தங்கராஜூ அதிமுகதியாகராஜன், திமுக
1989அசோக்ராஜ், அதிமுகபனவைகருந்தழன், திமுக
1991அசோக்ராஜ், அதிமுகராமசாமி, திமுக
1996ஆ.ராசா, திமுகசுப்பிரமணியன் காங்கிரஸ்
1998ராஜரத்தினம், அதிமுகஆ.ராசா, திமுக
1999ஆ.ராசா, திமுகராஜரத்தினம், அதிமுக
2004ஆ.ராசா, திமுகசுந்தரம், அதிமுக
2009நெப்போலியன், திமுகபாலசுப்பிரமணியன், அதிமுக

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

பெரம்பலூர் (எஸ்சி) : தமிழ்ச்செல்வன், அதிமுக

துறையூர் (எஸ்சி) : ஸ்டாலின்குமார், திமுக

லால்குடி : சவுந்தரபாண்டியன், திமுக

முசிறி : செல்வராசு, அதிமுக

மண்ணச்சநல்லூர் : பரமேஸ்வரி, அதிமுக

குளித்தலை : ராமர், திமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

என்.ஆர். சிவபதி (அதிமுக)

டி.ஆர். பச்சமுத்து (ஐஜேக )

எம். ராஜசேகரன் (அமமுக)

அருள் பிரகாசம் (மநீம)

சாந்தி (நாம் தமிழர்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in