

நீண்டகாலமாக பொதுத்தொகுதியாக இருந்த செங்கல்பட்டு 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. சென்னைக்கு அருகில் உள்ள தொகுதி என்பதால் அதன் தாக்கம் இந்த தொகுதியில் அதிகம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் இரா. அன்பரசு போட்டியிட்டு வென்ற தொகுதி. இருப்பினும் இந்த தொகுதியை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக நேரடியாக களம் கண்டு வரும் தொகுதியாகவே இருந்துள்ளது. இரண்டுமுறை இந்த தொகுதியில் பாமக சார்பில் ஏ.கே. மூர்த்தி போட்டியிட்டு வென்றுள்ளார்.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
உத்தரமேரூர்
மதுராந்தகம் (எஸ்சி)
செய்யூர் (எஸ்சி)
திருப்போரூர்
தற்போதைய எம்.பி
மரகதம் குமரவேல், அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் சதவீதத்தில் ± |
| அதிமுக | மரகதம் குமரவேல் | 499395 |
| திமுக | செல்வம் | 352529 |
| மதிமுக | மல்லையா சத்யா | 207080 |
| காங் | விஸ்வநாதன் | 33313 |
முந்தைய தேர்தல்கள்
செங்கல்பட்டு (பொதுத்தொகுதி)
| ஆண்டு | வென்றவர் |
| 1971 | சிட்டிபாபு, திமுக |
| 1977 | வெங்கடசுப்பா ரெட்டி, காங் |
| 1980 | இரா. அன்பரசு, காங் |
| 1984 | ஜெகத்ரட்சகன், அதிமுக |
| 1989 | காஞ்சி பன்னீர்செல்வம், அதிமுக |
| 1991 | ராஜேந்திரகுமார், அதிமுக |
| 1996 | பரசுராமன், திமுக |
| 1998 | காஞ்சி பன்னீர்செல்வம், அதிமுக |
| 1999 | ஏ.கே.மூர்த்தி, பாமக |
| 2004 | ஏ.கே.மூர்த்தி, பாமக |
காஞ்சிபுரம் (ரிசர்வ் தொகுதி)
2009 விஸ்வநாதன், காங்- ராமகிருஷ்ணன், அதிமுக
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
காஞ்சிபுரம் : எழிலரசன், திமுக
செங்கல்பட்டு : வரலட்சுமி, திமுக
உத்தரமேரூர் : கே.சுந்தர், திமுக
மதுராந்தகம் (எஸ்சி) : புகழேந்தி, திமுக
செய்யூர் (எஸ்சி) : ஆர்.டி. அரசு, திமுக
திருப்போரூர் : கோதண்டபாணி, அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
மரகதம் குமரவேல் (அதிமுக)
ஜி. செல்வம் (திமுக)
முனுசாமி (அமமுக)
தங்கராஜ் (மநீம)
ரஞ்சனி (நாம் தமிழர்)