

விருதுநகர் மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் மதுரையின் திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளை உள்ளடக்கியது விருதுநகர் மக்களவை தொகுதி. முந்தைய சிவகாசி தொகுதியை ஒப்பிடுகையில் மறு சீரமைப்புக்கு பிறகு உருவாக்கப்பட்ட விருதுநகர் தொகுதி முற்றிலும் மாறுபட்டது.
பட்டாசு, தீப்பெட்டி, பிரிண்டிங், பலசரக்கு, எண்ணெய் என முக்கிய தொழில்கள் நடைபெறும் விருதுநகரும், சிவகாசியும் இந்த தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளது. பெருமளவு வறட்சியான பகுதிகளை கொண்ட இடம் என்பதால் விவசாயம் குறைவே. இதனால் தான் சிறு சிறு தொழில்கள் இங்கு பெரிய அளவில் நடைபெறுகின்றன.இந்த தொழில்களை சார்ந்து தான் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் உள்ளது.
முந்தைய சிவகாசி தொகுதியிலும் சரி, மறு சீரமைப்புக்கு பிறகு உருவான விருதுநகர் தொகுதியிலும் சரி பொதுவாகவே தேசிய கட்சிகள் போட்டியிட அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வழக்கமாகவே திராவிட கட்சிகளின் கோட்டையாகவே இந்த தொகுதி இருந்து வந்துள்ளது.
திமுக, அதிமுக தவிர மதிமுகவுக்கும் வாக்கு வங்கி உள்ள தொகுதி இது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை எம்.பியாக இருந்த தொகுதி. இதுமட்டுமின்றி அதிமுக மூத்த தலைவராக இருந்த காளிமுத்து எம்.பியாக வெற்றி பெற்ற தொகுதி இது.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
விருதுநகர்
சிவகாசி
அருப்புக்கோட்டை
சாத்தூர்
திருமங்கலம்
திருப்பரங்குன்றம்
தற்போதைய எம்.பி
ராதாகிருஷ்ணன், அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
| அதிமுக | ராதாகிருஷ்ணன் | 406694 |
| மதிமுக | வைகோ | 261143 |
| திமுக | ரத்தினவேலு | 241505 |
| காங்கிரஸ் | மாணிக் தாகூர் | 38482 |
| சிபிஎம் | சாமுவேல்ராஜ் | 20157 |
முந்தைய தேர்தல்கள்
| ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
| 1980 | சவுந்தரராஜன், அதிமுக | ஜெயலட்சுமி, காங் |
| 1984 | சவுந்தரராஜன், அதிமுக | ஸ்ரீனிவாசன், சிபிஐ |
| 1989 | காளிமுத்து, அதிமுக | கோபாலசாமி, திமுக |
| 1991 | கனக கோவிந்தராஜூலு, அதிமுக | ஸ்ரீனிவாசன், சிபிஐ |
| 1996 | அழகர்சாமி, சிபிஐ | சஞ்சய் ராமசாமி, அதிமுக |
| 1998 | வைகோ, மதிமுக | அழகர்சாமி, சிபிஐ |
| 1999 | வைகோ, மதிமுக | ராமசாமி, அதிமுக |
| 2004 | ரவிச்சந்திரன், மதிமுக | கண்ணன், அதிமுக |
| 2009 | மாணிக் தாகூர், காங் | வைகோ, மதிமுக |
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
விருதுநகர் : சீனிவாசன், திமுக
சிவகாசி : ராஜேந்திர பாலாஜி, அதிமுக
அருப்புக்கோட்டை: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், திமுக
சாத்தூர் : சுப்பிரமணியன், அதிமுக
திருமங்கலம் : ஆர்.பி. உதயகுமார், அதிமுக
திருப்பரங்குன்றம்; சீனிவேல், அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
அழகர்சாமி (தேமுதிக)
மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)
பரமசிவ ஐயப்பன் (அமமுக)
முனியசாமி (மநீம)
அருள்மொழிதேவன் (நாம் தமிழர்)