சிதம்பரம் மக்களவைத் தொகுதி

சிதம்பரம் மக்களவைத் தொகுதி
Updated on
1 min read

நீண்டகாலமாக தமிழகத்தில் உள்ள தனித்தொகுதிகளில் சிதம்பரமும் ஒன்று. இந்த தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் பலவும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு இடம் பெயர்ந்துள்ளன.

கடலூர் மாவட்டத்தின் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், அரியலூர் மாவட்டத்தின் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதியையும் இணைத்து 2009-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தொகுதி சிதம்பரம்.

கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் பலமுறை காங்கிரஸ் இங்கு வென்றுள்ளது. இருப்பினும் திமுக, அதிமுகவுக்கு அதிகமாக வாக்கு வாங்கி உள்ளது. இதை தவிர பாமகா, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் வாக்கு வங்கி உண்டு.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இங்கு போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸின் வள்ளல் பெருமான், பாமகவின் தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோரும் எம்.பி.யாக இருந்த தொகுதி.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

சிதம்பரம்

காட்டுமன்னார் கோவில்( எஸ்சி)

புவனகிரி

அரியலூர்

ஜெயங்கொண்டம்

குன்னம்

தற்போதைய எம்.பி

சந்திரகாசி, அதிமுக

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்

கட்சி  வேட்பாளர்வாக்குகள்
அதிமுகசந்திரகாசி  429536
விசிக     திருமாவளவன்301041
பாமகசுதாமணிரத்தினம்279016
காங்வள்ளல் பெருமான்28988

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1971மாயவன், திமுகஇளையபெருமாள், ஸ்தாபன காங்
1977முருகேசன், அதிமுகராஜாங்கம், திமுக
1980குழந்தைவேலு, திமுகமகாலிங்கம், சிபிஎம்
1984வள்ளல் பெருமான், காங்கண்ணபிரான், திமுக
1989  வள்ளல் பெருமான், காங்அய்யசாமி, திமுக
1991வள்ளல் பெருமான், காங்சுலோச்சனா அய்யாசாமி, திமுக
1996கணேசன், திமுகதலித் எழில்மலை, பாமக
1998தலித் எழில்மலை, பாமககணேசன், திமுக
1999பொன்னுசாமி, பாமகதிருமாவளவன், தமாகா கூட்டணி
2004பொன்னுசாமி, பாமகதிருமாவளவன், விசிக
2009திருமாவளவன், விசிகபொன்னுசாமி, பாமக

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

சிதம்பரம்                       : பாண்டியன், அதிமுக

காட்டுமன்னார் கோவில்( எஸ்சி) : முருகுமாறன், அதிமுக

புவனகிரி                       :  சரவணன், திமுக

அரியலூர்                       : ராஜேந்திரன், அதிமுக

ஜெயங்கொண்டம்               : ராமஜெயலிங்கம், அதிமுக

குன்னம்                        : ராமசந்திரன், அதிமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

பொ. சந்திரசேகர் (அதிமுக)

திருமாவளவன் (விசிக)

ஏ.இளவரசன் (அமமுக)

ரவி (மநீம)

சிவா ஜோதி (நாம் தமிழர்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in