

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து 2014-ம் ஆண்டு தனியாக பிரிந்து தெலங்கானா மாநிலம் உருவானது. தெலங்கானா மாநிலம் உருவாக பெரும் போராட்டம் நடத்தி வென்றி கண்ட தெலங்கானா ராஷ்டிர சமிதியும், அதன் தலைவர் சந்திரசேகர் ராவும் இந்த மாநிலத்தை பொறுத்தவரை அசைக்க முடியாத சக்திகள்.
வரும் மக்களவை தேர்தலுடன் சேர்ந்து தான், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து மீண்டும் பெரும் வெற்றி பெற்று முதல்வராக பதவியில் அமர்ந்துள்ளார் சந்திரசேகர் ராவ்.
தெலங்கானா ராஷ்டிர சமிதியை வீழ்த்த காங்கிரஸுடன் கரம் கோர்த்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சி சட்டப்பேரவைத் தேர்தலில் பலன் அளிக்கவில்லை. தனித்து போட்டியிட்ட பாஜகவும் தோல்வியை சந்தித்தது.
2014- மக்களவை தேர்தல், தெலங்கானா
கட்சி | தொகுதிகள் (17) | வாக்கு சதவீதம் (%) |
தெலங்கானா ராஷ்டிர சமதி | 11 | 39.90 |
காங்கிரஸ் | 2 | 20.5 |
பாஜக | 1 | 8.5 |
ஓய்எஸ்ஆர் காங் | 1 | 2.9 |
ஒவைசி கட்சி | 1 | 1.4 |
வரும் மக்களவை தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமதி தனித்து போட்டியிடும் நிலையில், காங்கிரஸ், தெலுங்குதேசம், பாஜக தனியாக களம் காண்கிறன.
2009- மக்களவை தேர்தல், தெலங்கானா
கட்சி | தொகுதிகள் (42) | வாக்கு சதவீதம் |
காங்கிரஸ் | 33 | 38.95 |
பிரஜா ராஜ்யம் | 0 | 17.93 |
தெலுங்கு தேசம் | 6 | 24.93 |
தெலங்கானா ராஷ்டிர சமதி | 2 | 6.14 |
ஏஐஎம்ஐஎம் | 1 | 1.93 |