

வட கிழக்கு மாநிலங்களின் நுழைவு வாயிலான அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தற்போது மிக முக்கிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முஸ்லிம்கள் வாக்குகள் அதிகம் உள்ள இந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாகவே வங்கதேசத்தவர்கள் பிரச்சினையை முன்னிறுத்தியே அரசியல் களம் நகர்ந்து வருகிறது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ், இஸ்லாமிய வாக்கு வங்கியை கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டன. பாஜக பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலம் அசாம் கண பரிஷத், போடோலாந்து கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது.
2014- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (14) | வாக்கு சதவீதம் |
பாஜக | 7 | 36.5 |
காங்கிரஸ் | 3 | 29.6 |
ஐக்கிய ஜனநாயக முன்னணி | 3 | 14.8 |
அசாம் கண பரிஷத் | 0 | 3.8 |
வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச முஸ்லிம்களுக்கு எதிராக இதனை ஆயுதமாக பாஜக பயன்படுத்துவதாக காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக முன்னணி போன்றவை புகார் கூறி வருகின்றன.
வங்கதேசத்தவர்கள் அசாமில் குடியேறுவதை எதிர்த்து அரசியல் களம் கண்ட அசாம் கண பரிஷத் போன்ற கட்சிகளும் கூட பாஜகவின் இந்த திட்டத்தை தற்போது எதிர்க்கத் தொடங்கியுள்ளன. ஏனெனில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க பாஜக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மதம் சார்ந்து பாராமல் வங்கதேசத்தவர்களை வெளிநாட்டினராக கருத வேண்டும் என அசாம் கண பரிஷத் குரல் எழுப்பி வருகிறது.
2009- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (14) | வாக்கு சதவீதம் |
காங்கிரஸ் | 7 | 33.91 |
| பாஜக கூட்டணி |
|
|
பாஜக | 4 | 17.21 |
அசாம் கண பரிஷத் | 1 | 12.61 |
ஐக்கிய ஜனநாயக முன்னணி | 1 | 17.1 |
போடோ மக்கள் முன்னணி | 1 |
|