தேனி மக்களவைத் தொகுதி

தேனி மக்களவைத் தொகுதி
Updated on
2 min read

ஒருகாலத்தில் தென் தமிழகத்தில் மதுரைக்கு நிகரான நகரமாக இருந்தது பெரியகுளம். இதனால் தான் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்தது. இப்போது மாவட்ட தலைநகரான தேனியின் பெயரிலேயே மக்களவை தொகுதியாக உள்ளது.

மக்களவை தொகுதியின் பெயரில் கண்டிப்பாக சட்டப்பேரவைத் தொகுதி இருக்கும். விருதுநகர் மக்களவை தொகுதி என்றால் அதற்குள் விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. ஆனால் தேனியின் பெயரில் மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது. தேனி சட்டப்பேரவைத் தொகுதி இல்லை.

தமிழகத்தில் விவசாயம் நன்கு நடைபெறும் மாவட்டங்களில் தேனியும் ஒன்று. பெருமளவு விவசாயத்தை நம்பியே இந்த பகுதியின் பொருளாதாரம் உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட மக்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி இது.

தேனி மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளும் தேனி மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

தொடக்க காலத்தில் காங்கிரஸ் வென்ற தொகுதி இது. பின்னர் அதிமுக, திமுக இடையே தான் இங்கு போட்டி இருந்துள்ளது. எனினும் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டபோது அக்கட்சியின் சார்பில் களம் கண்ட ஜே.எம் ஆருண் 2முறை இங்கு எம்.பியாக இருந்துள்ளார்.

இதுமட்டுமின்றி அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, தற்போது அமமுக துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி தினகரன் ஆகியோர் எம்.பி.யாக இருந்த தொகுதி இது.

இந்த தொகுதிக்குப்பட்ட ஆண்டிபட்டியில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும். ஜெயலலிதாவும் வென்ற தொகுதி இது. ஆண்டிபட்டி மட்டுமின்றி போடி தொகுதியிலும் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றுள்ளார். எனவே அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ள தொகுதியாக இருந்து வந்துள்ளது. 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

கம்பம்

போடிநாயகனூர்

பெரியகுளம் (எஸ்சி)

ஆண்டிபட்டி

உசிலம்பட்டி

சோழவந்தான் (எஸ்சி)

தற்போதைய எம்.பி

பார்த்திபன், அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சி                         வேட்பாளர்                                                வாக்குகள்

அதிமுக                 பார்த்திபன்                                               571254

திமுக                     பொன்.முத்துராமலிங்கம்                   256722

மதிமுக                 அழகுசுந்தரம்                                         134362

காங்கிரஸ்            ஆரோன் ரஷின்                                     71432

முந்தைய தேர்தல்களில் வென்றவர்கள்

பெரியகுளம் தொகுதி

1980       கம்பம் நடராஜன், திமுக

1982       ஜக்கையன், அதிமுக

1984       செல்வேந்திரன், அதிமுக

1989       சேடப்பட்டி முத்தையா, அதிமுக

1991       ராமசாமி, அதிமுக

1996       ஞானகுருசாமி, திமுக

1998       சேடப்பட்டி முத்தையா, அதிமுக

1999       டி.டி.வி தினகரன், அதிமுக

2004       ஜே.எம் ஆருண், காங்

தேனி தொகுதி

2009       ஜே.எம் ஆருண், காங்

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

கம்பம்                               : ஜக்கையன், அதிமுக

போடிநாயகனூர்             :  ஓ.பன்னீர்செல்வம், அதிமுக

பெரியகுளம் (எஸ்சி)      : கதிர்காமு, அதிமுக

ஆண்டிபட்டி                     : தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக

உசிலம்பட்டி                    : நீதிபதி, அதிமுக

சோழவந்தான் (எஸ்சி)    : மாணிக்கம், அதிமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in