

அதிகஅளவு கிராமப்புறங்களை கொண்ட தர்மபுரி தொகுதி தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் தேர்தலில் ஜாதிய கணக்குகள் அதிகம் எடுபடும் தொகுதியாகவும் தர்மபுரி இருந்து வருகிறது.
தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் விவசாயம் மட்டுமே ஒரே தொழிலாக இருந்து வருகிறது. பிழைப்புக்காக வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கும் கூலித்தொழிலாளர்களாக செல்ல வேண்டிய நிலையிலேயே இந்த பகுதி மக்கள் உள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வென்ற இரண்டு தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி போட்டியிட்டு அதிமுகவை வீழ்த்தினார்.
பாமகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ள தொகுதி. கூட்டணி பலத்தை தாண்டி தனிப்பட்ட முறையில் பாமக செல்வாக்குடன் இருப்பதால் வெற்றி அல்லது இரண்டாவது இடத்தை தொடர்ந்து கைபற்றி வந்துள்ளது. 1989-ம் ஆண்டு தேர்தல் முதலே பாமக இங்கு தனது வாக்கு வங்கியை நிருபித்து வருகிறது. பாமக சார்பில் பாரிமோகன், பு.த.இளங்கோவன், செந்தில் என பலர் இங்கு எம்.பி.யாக இருந்துள்ளனர். மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்படி ராமமூர்த்தியும் இந்த தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வாகியுள்ளார்.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத்தொகுதிகள்
தர்மபுரி
பென்னாகரம்
மேட்டூர்
பாப்பிரெட்டிபட்டி
பாலக்கோடு
அரூர் (எஸ்சி)
தற்போதைய எம்.பி
அன்புமணி, பாமக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
| பாமக | அன்புமணி | 468194 |
| அதிமுக | மோகன் | 391048 |
| திமுக | தாமரைச் செல்வன் | 180297 |
| காங் | ராமசுகந்தன் | 15455 |
முந்தைய தேர்தல்கள்
| ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
| 1977 | வாழப்பாடி ராமமூர்த்தி | பொன்னுசாமி, ஸ்தாபன காங் |
| 1980 | அர்ஜூனன், திமுக | பூவராகவன், ஜனதா |
| 1984 | தம்பிதுரை, அதிமுக | பார்வதி கிருஷ்ணன், சிபிஐ |
| 1989 | எம்.ஜி.சேகர், அதிமுக | பு.த.இளஙகோவன், பாமக |
| 1991 | தங்கபாலு, காங் | பு.த.இளங்கோவன், பாமக |
| 1996 | தீர்த்தராமன், தமாகா | சுப்பிரமணியம், காங் |
| 1998 | பாரிமோகன், பாமக | தீர்த்தராமன், தமாகா |
| 1999 | பு.த.இளங்கோவன், பாமக | கே.பி.முனுசாமி, அதிமுக |
| 2004 | செந்தில், பாமக | பு.த.இளங்கோவன், பாஜக |
| 2009 | தாமரைச்செல்வன், திமுக | செந்தில், பாமக |
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
தர்மபுரி : சுப்பிரமணி, திமுக
பென்னாகரம் : இன்பசேகரன், திமுக
மேட்டூர் : செம்மலை, அதிமுக
பாப்பிரெட்டிபட்டி : பழனியப்பன், அதிமுக
பாலக்கோடு : அன்பழகன், அதிமுக
அரூர் (எஸ்சி) : முருகன், அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
அன்புமணி ராமதாஸ் (பாமக)
எஸ். செந்தில் குமார் (திமுக)
பழனியப்பன் (அமமுக)
ராஜசேகர் (மநீம)
ருக்மணிதேவி (நாம் தமிழர்)