நீரிழிவு நோய்க்கு வித்திடுமா புகைப் பழக்கம்?

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு புகைப் பழக்கம் உடல் ரீதியாகப் பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

புகைப் பிடிக்காதோரை ஒப்பிடும்போது புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45% வாய்ப்புகள் அதிகம்.

புகைப் பழக்கம் உள்ளவர்களின் வயிற்றில் கொழுப்பு சேகரமாகும். அதனால் இயற்கையான இன்சுலின் சுரப்பு குறையும்.

புகைப் பிடிக்கும் ஒரு நீரிழிவு நோயாளியின் இதயம், தமனியின் ஆரோக்கியம் (உடலின் ஒரு முக்கிய இரத்தக் குழாய்), மற்ற புகைபிடிப்பவரை விட 2 மடங்கு அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.

நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்போர் இரு தரப்பினருமே புகைப் பிடிப்பதைக் கைவிட, குறைக்க முயற்சிக்க வேண்டும்.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களில் புகை பழக்கத்துடன் மதுப் பழக்கமும் இருப்பின், இந்த இரண்டையும் மூட்டைகட்டி விடுவது மிகவும் அவசியம்.

Web Stories

மேலும் படிக்க...