மெனோபாஸ்: சில அடிப்படை புரிதல்கள்

பெண்கள் பூப்படையும்போது மாதவிடாய் வருதல் என்பது எப்படி இயற்கையானதோ, அதேபோல் 45 வயதைக் கடந்த பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதும் இயல்பானது.

பெண்ணின் ஹார்மோன் உற்பத்தி படிப்படியாக குறைந்து கடைசியில் மாதவிடாய் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ‘குட்பை’ சொல்வதே மேனோபாஸ் (Menopause).

மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களின் சினைப்பையில் கரு உற்பத்தியாகாது. சிலருக்கு 45 வயதுக்கு முன்பே வரலாம். சிலருக்கு 55 வயது வரை கூட நீடிக்கலாம்.

கருப்பையில் இந்த வயதில் சில மாற்றங்களாலும், அதன் செயல்பாடு குறைவாலும் ஈஸ்ட் ரோஜன் எனப்படும் பெண்ணின் ஹார்மோன் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.

ஹார்மோன் போதுமானதாக இல்லாமல், கருத்தரிக்க முட்டைகளைச் சினைப்பைகளால் உருவாக்க முடியாத நிலையில் ‘மாதவிடாய் நிறுத்தம்’ ஏற்படுகிறது.

தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மேலாக, மாதவிடாய் இல்லாமலேயே இருக்கும். இதுவே மெனோபாஸ் நிலையைப் பெண்கள் அடைந்து விட்டதற்கான முதல் அறிகுறி.

சிலருக்கு, மெனோபாஸ் நிலைக்குப் பிறகும் உதிரப்போக்கு இருந்தால், உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Web Stories

மேலும் படிக்க...