துரித உணவு அதிகம் உட்கொள்வது ஏன் ஆபத்து?
தொடர்ந்து துரித உணவு (fast food) சாப்பிடுவோருக்கு பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
துரித உணவு உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் போன்றவை கிடைக்காமல் போய்விடும்.
உடல் எடை அதிகரிப்பதாலும், உடல் செயல்பாடு அதிகம் இல்லாததாலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
துரித உணவு விளைவால் குழந்தைகளுக்கு இரைப்பை அழற்சி, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன் போன்றவை ஏற்படலாம்.
துரித உணவின் மறைமுக விளைவாக படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் குறையும். தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.
வாரம் ஓரிரு முறை துரித உணவைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், தினமும் துரித உணவை நாடுவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
துரித உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகமாகவும், ஊட்டச்சத்துக் குறைவாகவும் இருப்பதே அடிக்கடி இதை சாப்பிடக் கூடாது என்பதற்கு முக்கிய காரணம்.