Web Stories
மூளைக்கு ஆற்றல் தரும் 5 உணவுப் பொருட்கள்!
மனித மூளையின் செயல்பாட்டுக்கு சரியான உணவும் ஊட்டச்சத்தும் அவசியம். மூளைக்குப் போதிய ஆற்றலைத் தரும் 5 உணவுப் பொருட்கள் இவை...
1) மீன் எண்ணெய் 2) முழுத் தானியங்கள் 3) புரோக் கோலி 4) பரங்கி விதைகள் 5) கொட்டை பருப்புகள்
வைட்டமின்-கே, துத்தநாகம், வைட்டமின்-சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு ஊட்டமளிக்கத் தேவைப்படும்.
காலி ஃபிளவர், பழுப்பு அரிசி, வெண்ணெய், முட்டை, முட்டைக் கோஸ், சோயா பொருட்கள் உள்ளிட்டவையும் மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
வயதாகும்போது மூளை சுறுசுறுப்பான செயல்பாட்டை இழக்கத் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து நினைவாற்றல் இழப்பும் அறிதல் உணர்வும் குறையும்.
மூளையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கச் சமச்சீர், ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது அவசியம்!