தொப்பைக்கு ‘செக்’ வைக்கும் உணவுப் பட்டியல்!

சில உணவுகளை அடியோடு தவிர்த்தால் தொப்பைப் பகுதியைத் தேடும் மஞ்சள் கொழுப்புக்கு ‘செக்’ வைத்துவிடலாம். அந்த உணவுப் பட்டியல்...

கேக்குகள், குக்கீஸ், மைக்ரோவேவ் உணவுகள், பீட்ஸா, பிஸ்கட்டுகள், இனிப்பு வகைகள், ரோல்ஸ், பிரெஞ்ச் பிரைஸ், பேஸ்ட்ரிகள், டோனெட்ஸ்,

ஐஸ்கிரீம், நெய், இனிப்பு சேர்க்கப்பட்ட தயிர் மற்றும் லஸ்ஸி உள்ளிட்ட பால் உணவுகள், குளிர்பானங்கள் மற்றும் எனர்ஜி பானங்கள்

எண்ணெயில் பொரித்த இறைச்சி வகைகள், பொறித்த மீன், மாவுசத்து அதிகம் கொண்ட உணவுகள், நார்சத்து குறைவாக உள்ள உணவுகள்

கிழங்கு வகைகள், சாஸ் மற்றும் மயோனைஸ் சாஸ், மோனோ சோடியம் குளூட்டாமேட் உள்ளிட்ட சுவையூட்டிகள், மது பானங்கள்.

ஆல்கஹாலைத் தொடர்ச்சியாக எடுத்துகொள்வதன் மூலம் கிடைக்கும் கலோரிகள் உடலில் கெட்டக் கொழுப்பாகச் சேமிக்கப்படுகின்றன.

தொப்பைக் கொழுப்பை குறைப்பதில் புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம் அதிகமுள்ள உணவுகள் இவைதான்...

கோழி, மீன் (குழம்பு), முட்டை, முந்திரி, பாதாம், அவித்த வேர்க்கடலை, பால், சீஸ், மோர், பன்னீர், சோயா பீன்ஸ், ராஜ்மா, பீன்ஸ், பட்டாணி.

நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது தொப்பையைக் குறைக்க உதவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ப்ராக்கோலி, கேரட், ஆப்பிள், ஓட்ஸ், பார்லி நல்லது.

Web Stories

மேலும் படிக்க...