‘பணக்காரர்’ ஆக வாழ்வது எப்படி? - பார்கின்சன் விதியும், 7 உத்திகளும்
“அதிகரிக்கும் வருமானத்துக்கு ஏற்ப, ஒருவரது செலவுகளும் தொடர்ந்து அதிகரிக்கும்” என்கிறார் பார்கின்சன் (PARKINSON LAW OF MONEY).
அதாவது, “ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறாரோ அதைவிட சற்று அதிகமாகவே அவர் செலவழிப்பார்” என்கிறார் பார்கின்சன்.
இதைக் கடப்பவர்களே பணக்காரர்கள் ஆகிறார்கள். சரி... இதைப் பணக்காரர்களால் மட்டும் எப்படிக் கடக்க முடிகிறது? இதோ 7 உத்திகள்...
1. வருமானத்தில் 50%-ஐ மட்டுமே பணக்காரர்கள் செலவழிப்பர். எஞ்சிய 50% பணத்தை எதிர்காலத்துக்காக சேமிப்பர்.
2. பணக்காரர்கள் வங்கிகளுக்கு சேமிப்புக்கும் ஸ்டாண்டிங் இன்ஸ்டிர்க்ஷன் (Standing Instruction) கொடுப்பர். தானாகவே சேமிப்புக்கு சென்றுவிடும்.
3. பணக்காரர்கள் எந்தப் பொருளை வாங்கும்போதும் பேரம் பேசத் தவறுவதில்லை. இதனால், தங்கள் மதிப்பு குறைந்துவிடும் என எண்ணுவதும் இல்லை.
4. பணக்காரர்கள் நடுத்தர - சற்று உயர்வான விலையிலான பொருள்களையே வாங்குவர். மிக அதிக விலை மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்குவதில்லை.
5. பணக்காரர்கள் வருமானம் தராத எந்தப் பொருள்களையும் கடன் அல்லது இஎம்ஐ முறையில் வாங்குவதில்லை.
6. பணக்காரர்கள் ‘ஏழைகளைப் போல’ வாழ்கிறார்கள். ஆனால் பணக்காரர்களைப் போல அதிகம் சேமிக்கிறார்கள்.
7. குறைவாகப் பணம் சம்பாதிப்பதில் தவறில்லை. ஆனால் அதிகம் செலவழிக்கக் கூடாது என்பதே முக்கியமான விதி.