‘சோரியாசிஸ்’ பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?

சோரியாசிஸ் (Psoriasis) என்பது ஒரு தோல் நோய். ‘தன்னுடல் தாக்கும் நோய்’ (Auto immune diseases) வகையைச் சேர்ந்தது.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே தோல் செல்களை எதிரிகளாக நினைத்துத் தவறுதலாகத் தாக்குதல் நடத்துவதால் சோரியாசிஸ் ஏற்படுகிறது.

மன அழுத்தம், தொற்றுக் கிருமி, காலநிலை மாற்றம், ஒவ்வாத உணவு, புகை - மதுப் பழக்கம் என பல காரணிகள்  ‘சோரியாசிஸ்’ நோயைத் தூண்டக் கூடியவை.

நம் தற்காப்பு மண்டலம் ஒரு முறை நம் செல்களையே எதிரி என்று நினைத்துவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் மாறுவதில்லை என்பதால்தான்...

சோரியாசிஸ் போன்ற தன்னுடல் தாக்கும் நோய்களுக்கு என்ன சிகிச்சை கொடுத்தாலும், முழுவதுமாகக் குணப்படுத்த முடிவதில்லை.

சோரியாசிஸ் நோயைக் கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

மருந்துகளை நிறுத்திய பின்னர் மீண்டும் அதே அறிகுறிகள் தோன்றும். பலருக்குப் பருவகால மாறுதலுக்கு ஏற்ப நோய் கூடுவதும் குறைவதுமாக இருக்கும்.

சோரியாசிஸ்  பிரச்சினைக்கு மாற்று மருத்துவத்திலும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதற்கு உரிய மருத்துவர்களை நாடலாம்.

மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வது, எந்த மருத்துவத்தை மேற்கொண்டாலும், மனம் தளராமல் தொடர்வது நல்ல பலன் தரும்.

Web Stories

மேலும் படிக்க...