முட்டையின் மஞ்சள் கரு நல்லதா, கெட்டதா?
முட்டையின் வெள்ளைக் கரு, மஞ்சள் கரு இரண்டிலும் ஏறத்தாழ ஒரே அளவுக்குத்தான் புரதம் இருக்கிறது.
மஞ்சள் கருவையும் சேர்த்து எடுத்துக்கொண்டால்தான் முட்டையில் இருக்கின்ற புரதம் முழுவதுமாகக் கிடைக்கும்.
100 கிராம் முட்டையில் 10 கிராம் கொழுப்பு இருக்கிறது. கெடுதலான நிறை கொழுப்பு 3.2 கிராம்தான். பலன் தரும் நிறைவுறாக் கொழுப்பு 6.8 கிராம்.
முட்டையில், உடலுக்கு நன்மை சேர்க்கும் ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு 4 கிராம் இருக்கிறது.
கொழுப்பு தினமும் உடலுக்கு 40 கிராம் வரை தேவை. முட்டையில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு வலு சேர்க்கும் என்பதுதான் உண்மை.
100 கிராம் முட்டையில் 373 மி.கிராம் கொலஸ்டிரால்தான் இருக்கிறது. நம் அன்றாடப் பணிகளுக்குத் தினமும் 2,000 மி.கிராம் கொலஸ்டிரால் தேவை.
குழந்தைகளுக்கு தினமும் 50 கிராம் முட்டைகள் 2 கொடுக்கலாம். ஆரோக்கியமிக்க பெரியவர்களும் தினசரி 2 முட்டைகள் மஞ்சள் கருவுடன் சாப்பிடலாம்.
சர்க்கரை, இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு வந்தவர்கள், கொலஸ்டிரால் அதிகமாக உள்ளவர்கள் மஞ்சள் கருவுடன் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.
வேகவைத்த முட்டைதான் சிறந்தது. எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதிகம் சூடுபடுத்தினால் பெரும்பாலான சத்துகள் அழிந்துவிடும்.
தினமும் முட்டை எடுத்துக்கொள்ளும்போது, எண்ணெயும் நிறை கொழுப்பும் மிகுந்த மற்ற உணவை தேவைக்கு அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.