விறைப்புத் தன்மை பிரச்சினையும் சில புரிதல்களும்!
தாம்பத்தியத்தில் விறைப்புத் தன்மை பிரச்சினைக்கும், மன அழுத்தத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு.
விந்துப் பரிசோதனை, ஹார்மோன், அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்யலாம். மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
விறைப்புத் தன்மை பிரச்சினைக்கு இப்போது நவீன மருந்துகள் நிறைய உள்ளன. ஆனால், ஒருவருக்கு ஏற்ற மருந்தை மருத்துவர்தான் தீர்மானிக்க முடியும்.
உளவியல் சிகிச்சை தவிர, விறைப்புத் தன்மைக்குச் சிறப்பு மாத்திரைகளும் உள்ளன. அவையும் உரிய மருத்துவரே தீர்மானித்து பரிந்துரைக்க வேண்டும்.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், போதைப் பழக்கம் போன்றவை இருந்தால் அவற்றுக்கும் சிகிச்சை தேவைப்படும்.
புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் இருந்தால் அவற்றை நிறுத்த வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
விறைப்புத் தன்மைக்கு உணவு முறையும் உதவும். சிவப்பு (அ) இளஞ்சிவப்பு நிறக் காய்கனிகள், கீரைகள் உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகள் நல்லது.
நட்ஸ் உள்ளிட்ட ஆரோக்கிய புரத உணவு வகைகள், முட்டை, இறைச்சி போன்றவையும் விறைப்புத் தன்மை பிரச்சினைக்கு உதவலாம் என்கின்றன மருத்துவர்கள்.