Is ‘Meal Maker’ Good? - Some Important Tips
Is ‘Meal Maker’ Good? - Some Important Tips

‘மீல் மேக்கர்’ நல்லதா? - சில அவசிய குறிப்புகள்

Updated on
2 min read

சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் சோயா பாலின் கழிவுகளில் இருந்து கிட்டும் சோயா எண்ணெய் கழிவுகளில் தயாரிக்கப்படுவதே மீல் மேக்கர்.

அசைவ உணவுக்கு மாற்றாக ‘மீல் மேக்கர்’ சந்தையில் அறிமுகம் ஆனது. இதை முதலில் தயாரித்து விற்ற நிறுவனத்தின் பெயர்தான் ‘மீல் மேக்கர்’.

1980-களில் வெஜிடபிள் பிரியாணி தயாரிக்க ‘மீல் மேக்கர்’ பயன்படுத்தப்பட்டது. இதில் புரதம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், செலினியம் சத்துகள் உள்ளன.

நூறு கிராம் மீல் மேக்கரில் சுமார் 50 கிராம் புரதம் உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிறைந்தது போன்ற உணர்வைத் தருகிறது; அடிக்கடி சாப்பிடும் ஆர்வத்தை குறைக்கிறது.

மீல் மேக்கரில் உள்ள புரதம், உடல் கொழுப்பைக் குறைக்கவும் எடையைக் குறைக்கவும் உதவும். இதன் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இதய நலத்துக்கு நல்லது.

மீல் மேக்கரில் கொழுப்பு குறைவு. அதனால், உடல் பருமன் உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடலாம். சைவ உணவாளர்கள் இறைச்சிக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, புரதக் குறைபாட்டால் அவதிப்படுவோருக்கு மீல் மேக்கர் சிறந்த உணவு. இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் பெரிதாகக் கெடுதல் எதுவும் ஏற்படாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in