Web Stories
மஞ்சள், பூண்டு தேய்த்தால் முகப்பரு மறையுமா?
மஞ்சள், பூண்டு போன்றவற்றை முகத்தில் தேய்த்தால் முகப்பரு மறையும் என்று கூறுவதற்கு நவீன மருத்துவத்தில் ஆதாரம் இல்லை.
முகப்பருவைப் பொறுத்தவரை, அதைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, அதைக் கிள்ளாமல் இருக்க வேண்டும்.
இளம் சூடான தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவிச் சுத்தமாக வைக்க வேண்டும். முகத்தை துடைக்க தனியாக ஒரு துண்டு பயன்படுத்த வேண்டும்.
மருத்துவர் ஆலோசனைப்படி மேற்பூச்சுக் களிம்புகளையும் சில நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும்.
முகப்பருவுக்குக் காரணம் தெரியாமல், ‘கூகுள் டாக்ட’ரிடம் கேட்டோ, ‘யூடியூபர்’களிடம் கேட்டோ நீங்கள் சுயமாக எதையும் முகப்பருவில் பூசாதீர்கள்.