Web Stories
நம் ஆரோக்கியத்துக்கு ‘பாமாயில்’ கெடுதலா?
நம் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் செய்யும் என்று சொல்வது உண்மைதான் என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.
பனை எண்ணெய்யில் பால்மிட்டிக் அமிலம் (Palmitic Acid) உள்ளது. இது நிறைவுற்ற கொழுப்பு அமிலத்தைச் (Satutrated Fatty Acid) சார்ந்தது.
பொதுவாகவே, உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பின், எந்தவொரு நிறைவுற்ற கொழுப்பும் இதயத்துக்கு ஆபத்தைத் தரக்கூடியது தான்.
உடல் பருமனுக்கும் இது காரணம். இன்சுலின் எதிர்ப்புத் தன்மை (Insulin resistance) அதிகரித்து, நீரிழிவு ஏற்படவும் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.
பாமாயில் விலை குறைவு என்பதால் பலரும் பயன்படுத்துகின்றனர். மிகக் குறைந்த அளவில் இதைப் பயன்படுத்துவதால் ஆபத்துகளை குறைக்கலாம்.