‘Gastritis’ பிரச்சினை தீர பின்பற்ற வேண்டியவை என்னென்ன?
‘இரைப்பை அழற்சி’ (Gastritis) பிரச்சினையை காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் அது இரைப்பைப் புண் (Peptic ulcer) ஆக மாறிவிடும்.
இந்த வயிற்றுப் பிரச்சினை சரியாக, முதலில் நேரத்துக்கு உணவு சாப்பிட வேண்டும். அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டினி கிடக்கக் கூடாது. சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பான் மசாலா கூடாது.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி, ஸ்டீராய்டு மாத்திரைகளை தேவையில்லாமலும், அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.
மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். புளித்த உணவு வகைகளை ஒதுக்குங்கள்.
மென்பானங்களையும் குளிர்பானங்களையும் முடிந்த அளவு தவிர்க்கப் பாருங்கள். காபி, தேநீர் அருந்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.