வாய் துர்நாற்றமா? - தீர்வுக்கு சில எளிய வழிகள்!
வாய் சுகாதாரமின்மை சார்ந்து உண்டாகும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க, தினமும் இரு வேளை பல்துலக்குவது அவசியம்.
அவ்வப்போது துவர்ப்புச் சுவைமிக்க இயற்கையான பற்பொடிகளைப் பயன்படுத்த, வாய்ப்புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். பல் துலக்கும்போது, ஈறுகள் - நாக்குப் பகுதிகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.
நிறைய தண்ணீர் குடித்து, உடலை நீரூட்டத்துடன் வைத்திருப்பதும் அவசியம். புதினா இலைகளை நன்றாக மென்று சாப்பிடலாம்.
எச்சில் சுரப்பை அதிகரிக்க மிளகைப் பொடித்து வைத்துக் கொண்டு, ஐந்து சிட்டிகை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.
சீரகம், சப்ஜா விதைகள், சோம்பு ஆகியவற்றை வாயில் போட்டு மென்று சாப்பிட உடனடி யாக வாய் துர்நாற்றம் மறையும். இது தற்காலிக நிவாரணியே.
வாய் துர்நாற்றத்துக்கான காரணம் வாய்ப் பகுதி இல்லை எனில், மருத்துவரைச் சந்தித்து அடிப்படை காரணத்தை அறிவது முக்கியம்.
நீரிழிவு நோயாளர்கள் சர்க்கரையின் அளவை முறையாகக் கண்காணிப்பது முக்கியம். எந்தக் காரணத்தைக் கொண்டும் புகையும் மதுவும் கூடாது.
வாய் துர்நாற்றத்துக்கான மூலக் காரணியை அறிந்து மருத்துவம் மேற்கொள்வது மிகவும் அவசியம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.