ரத்த அழுத்தம் குறைய உதவும் வாழ்வியல் முறை!

உயர் ரத்த அழுத்தம் இருப்பின், முறைப்படி சாப்பிட்டு வாருங்கள். உணவில் கவனம் செலுத்துங்கள். முக்கியமாக, உப்பை மிதமாகப் பயன்படுத்துங்கள்.

அரிசி உணவு அளவோடு இருக்கட்டும். துரித உணவு வகைகளுக்குத் தடை போடுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

நொறுவைகள் வேண்டாம். காய்கறி, கீரை, பொட்டாசியம் மிகுந்துள்ள பழங்கள் ஆகியவற்றை அதிகம் உண்ணுங்கள். உடல் எடை சரியாக இருக்கட்டும். 

தினமும் ஏதாவது ஓர் உடற்பயிற்சி அல்லது 40 நிமிடத்துக்கு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இவற்றோடு தியானம், யோகா உதவும். 

மன அழுத்தத்துக்கு இடம் தராதீர்கள். இரவில் குறைந்தது 7 மணி நேரம் நிம்மதியாக உறங்க வேண்டும். 

மாதம் இரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பீர்; வருடத்துக்கு இரு முறை இதயம், சிறுநீரகம், கண் பரிசோதனைகள் செய்வீர்.

Web Stories

மேலும் படிக்க...