Top 5 teams that have advanced to playoffs most times in ipl history
Top 5 teams that have advanced to playoffs most times in ipl history

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு அதிக முறை முன்னேறிய டாப் 5 அணிகள்!

Updated on
2 min read

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றுக்கு அதிக முறை முன்னேறிய டாப் 5 அணிகள் குறித்த விவரத்தை பார்ப்போம்.

5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அதிகபட்சமாக 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனோடு சேர்த்து 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் கோப்பையை இதுவரை வெல்லாத ஆர்சிபி அணி நடப்பு சீசனோடு சேர்த்து 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மூன்று முறை ஐபிஎல் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த 2013 முதல் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடி வருகிறது. 

ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் 6 முறையும், குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் 3 முறையும், லக்னோ 2 முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in