Teams with the most wins in IPL cricket
Teams with the most wins in IPL cricket

அதிக வெற்றிகளை குவித்த ஐபிஎல் அணிகள்: மும்பை முதலிடம்!

Updated on
2 min read

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்துள்ள அணிகள் குறித்து பார்ப்போம். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த அணிகள் வெற்றிக்கொடியை பறக்கவிட்டுள்ளன.

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 150 வெற்றிகள் உடன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

140 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. சிஎஸ்கே-வும் 5 முறை ஐபிஎல் பட்டம் அடித்துள்ளது. 

134 வெற்றிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. இந்த அணி 3 முறை ஐபிஎல் பட்டம் வென்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்றான ஆர்சிபி 129 வெற்றிகளை பெற்றுள்ளது. 

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 121 வெற்றிகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 117 வெற்றிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 114 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in