food is the reason for being thin explained
food is the reason for being thin explained

ஒல்லியாக இருக்க உணவுதான் காரணம் எனில்..?

Updated on
2 min read

ஒருவர் தனது வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை இல்லாமல் ஒல்லியாக இருந்தால், முதலில் மருத்துவரிடம் நேரடி ஆலோசனைப் பெற வேண்டும். 
 

ஒருவேளை, ஒருவர் ஒல்லியாக இருக்க உணவுதான் காரணம் எனத் தெரிந்தால், சரியான உணவுமுறையைப் பின்பற்றி சரிசெய்ய முயற்சிக்கலாம். 
 

உடலின் சீரான வளர்ச்சிக்குப் புரதச் சத்துதான் மிகவும் உதவுகிறது. பால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி போன்றவற்றில் புரதம் மிகுந்துள்ளது. 
 

நிலக்கடலை, சோயா, பருப்பு, முந்திரிப் பருப்பு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், அவரை, துவரை, உளுந்து, மொச்சை, சுண்டல், முளைகட்டிய பயறுகள் புரதம் நிறைந்தவை. 
 

புரதம் மிகுந்த உணவை அதிகம் உட்கொள்ளலாம். முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றைத் தினமும் சாப்பிடலாம். அசைவத்தில் கிடைக்கும் புரதம் மிகவும் நல்லது.
 

அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களிலும் ஓரளவு புரதம் உள்ளது. சைவ உணவுகளில் உளுந்தம் பருப்பில் புரதம் மிக அதிகம். இது உடல் எடையை கூட்டும். 
 

தினமும் ஏதேனும் ஒருவகை பருப்புக் குழம்பு (அ)  பருப்பு சாம்பார், சிறுகீரை பருப்புக் கூட்டு அவசியம். கீரைகள், பழங்கள், காய்கறிகளை தேவைக்கு எடுத்துக்கொள்வீர். 
 

மாலைச் சிற்றுண்டியில் பொரித்த முந்திரிப் பருப்பு, அவித்த வேர்க்கடலை, கடலைமிட்டாய், எள்ளுருண்டை, சுண்டல், பயறுகள், பாதாம் பருப்புகள் நல்லது. 
 

மன அழுத்தம் ஆகாது. உடற்பயிற்சி அவசியம். குடல் புழு மாத்திரை சாப்பிடலாம். தினமும் அரை மணி நேரம் உடலில் வெயில் படவேண்டும். சரியான உறக்கம் முக்கியம்.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in