about sperm count decrease was explained
about sperm count decrease was explained

விந்தணு குறைவது ஏன்? - சில அலர்ட் குறிப்புகள்

Updated on
2 min read

ஆண்மைக் குறைவு என்பது இல்லறத்தில் முழுமையாக ஈடுபட இயலாத நிலை. மலட்டுத்தன்மை (Infertility) என்பது விந்தணு தொடர்பான பிரச்சினை.

மலட்டுத்தன்மை உள்ள ஆண்களால் இல்லறத்தில் முழுவதுமாக ஈடுபட முடியும். ஆனால், அவர்களால் குழந்தைப்பேறு கொடுக்க இயலாது. 
 

துரித உணவுகளின் நிறம், மணம், சுவை எல்லாமே ரசாயனம் கக்கிய விஷங்கள். இவையும் விந்தணுக்களை அழிக்கின்றன. 
 

விந்தணுக்களின் வளர்ச்சிக்கு உகந்த துத்தநாகம், தாமிரம், செலினியம், ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் யாவும் துரித உணவுகளில் குறைவே.
 

துரித உணவின் கொழுப்பும் எண்ணெயும் உடல் பருமனுக்கு காரணமாகி, பாலியல் ஹார்மோன்களை சிதைத்து விந்தணுக்களை புதைக்கின்றன.
 

மன அழுத்தங்கள்தான் இல்லற உறவுகளில் சிக்கல் ஏற்படுவது தொடங்கி விந்தணுக்களை அழிப்பது வரை பல பிரச்சினைகளுக்கு காரணம்.
 

ஆண்களின் விதைப்பை என்பது குளிர்ச்சியை விரும்பும் உறுப்பு. இதை உஷ்ணத்தால் உசுப்பக் கூடாது. இறுக்கமான உள்ளாடை - ஜீன்ஸ் ஆடை கூடாது. 
 

விதைப்பையில் உஷ்ணம் அதிகரிகரித்தால், விந்தணுக்கள் அழியும் என்பதால் தளர்வான உள்ளாடைகளையே அணிய வேண்டும். 
 

மடிக்கணினியை பல மணி நேரம் மடியில் வைப்பதும் உஷ்ணத்தைக் கூட்டி விந்தணு விளைச்சலை குறைக்கும். செல்போன் கதிர்வீச்சும் எதிரிதான்.
 

புகை, மது, போதை மருந்துப் பழக்கம், வெப்பச் சூழலில் வேலை பார்ப்பது முதலானவையும் விந்தணு உற்பத்திக்கு எதிரிகள். 
 

சிறுதானிய உணவு, புரத உணவு கூட்டுவது, உடற்பயிற்சி செய்வது, உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைப் பராமரிப்பது முக்கியம்.
 

மன அழுத்தம் தவிர்ப்பது, போதிய ஓய்வு, நல்ல உறக்கம் முக்கியம். பிரச்சினை அதிகம் எனில் நல்ல மருத்துவரை நாட தயங்கக் கூடாது.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in