chepauk stadium asisit csk or rcb ipl 2025
chepauk stadium asisit csk or rcb ipl 2025

சேப்பாக்கம் மைதானம் யாருக்கு சாதகம்?

Updated on
2 min read

ஐபிஎல் டி20 தொடரில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் போட்டி நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
 

சிஎஸ்கேவின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில், சென்னைக்கு எதிராக ஆர்சிபி 2008-ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது. 

சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஆர்சிபி 8 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
 

ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் ஆப்கானிஸ்தானின் ரிஸ்ட் ஸ்பின்னரா நூர் அகமதுவும் தற்போது இணைந்துள்ளது சிஎஸ்கேவுக்கு பலம். 

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் ஷாட்களை கோலி கையாள தொடங்கியுள்ளதால், சேப்பாக்கத்தில் ரன் குவிக்க முனைப்புக் காட்டுவார்.
 

சேப்பாக்கம் ஆடுகளத்தை கொண்டு ஆர்சிபி அணி கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவதில் ஆர்வம் காட்டக் கூடும். 
 

சேப்பாக்கத்தில் தனது சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பின்படி, தோனி சில சிக்ஸர்கள் விளாச வாய்ப்புள்ளது.
 

ஒட்டுமொத்தமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே சேப்பாக்கம் ஆடுகளம் கூடுதல் சாதகமாக இருக்கிறது.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in