Who is this Vignesh Puthur? - IPL debut is a blast
Who is this Vignesh Puthur? - IPL debut is a blast

யார் இந்த விக்னேஷ் புதூர்? - ஐபிஎல் அறிமுகமே அதகளம்!

Updated on
2 min read

முதல் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் மும்பை இந்தியன்ஸ் இளம் ஸ்பின்னர் விக்னேஷ் புதூர்.

23 வயதான விக்னேஷ் புதூர், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர். இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர். மெகா ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர்.

ஐபிஎல் அறிமுக வீரராக விக்னேஷ் 4 ஓவர்கள் வீசி, 32 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

கேரள மாநில சீனியர் அணிக்காக இதுவரை விளையாடாத அவர், மாநில அளவில் அண்டர் 14, அண்டர் 19 அளவில் தான் விளையாடி உள்ளார். 

கேரள கிரிக்கெட் லீக், டிஎன்பிஎல் தொடர்களில் விளையாடிய அவரது அப்பா சுனில் குமார் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அம்மா கே.பி.பிந்து.

திருச்சூர் புனித தாமஸ் கல்லூரி அணிக்காக கேரளா காலேஜ் ப்ரீமியர் டி20 லீகில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். 

ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்காக தனது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தி, கேரளா கிரிக்கெட் லீகில் விளையாடும் வாய்ப்பு பெற்றார்.

விக்னேஷ் புதூரின் ஆட்டத் திறனை கண்டுகொண்டு அவருக்கு மும்பை இந்தியன்ஸ் வாய்ப்பளித்ததாக சிலாகிக்கிறார் சூர்யகுமார் யாதவ். 

அடுத்தடுத்த போட்டிகளில்  விக்னேஷ் புதூர் தனது திறமையை அழுத்தமாக பதிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in