How will Mumbai fare in IPL 2025
How will Mumbai fare in IPL 2025

ஐபிஎல் 2025-ல் மும்பை அணி எப்படி? - ஒரு ப்ரிவ்யூ பார்வை

Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கடந்த 4 சீசன்களாக தடுமாறி வருகிறது. 2025-ல் மீண்டெழுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

கடந்த சீசன் முழுவதும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர். அவர் மீதான ரசிகர்களின் பார்வை இப்போது மாறத் தொடங்கியுள்ளது.

சமீப காலமாக செம்ம ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மா இம்முறை மும்பை அணிக்கு பெரும் பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்களை சரியான கலவையில் புத்திசாலித்தனமாக தேர்வு செய்தது மும்பை அணி நிர்வாகம்.

டிரெண்ட் போல்ட் அணிக்கு திரும்பி இருப்பது வேகப்பந்து வீச்சுக்கு வலு சேர்க்கக் கூடும்.  கார்பின் போஸ், ரீஸ் டாப்லே ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்கள். 

சிஎஸ்கே-வில் ஆல்ரவுண்டராக இருந்த தீபக் சாஹரும் புதிதாக இணைந்துள்ளார். சுழலில் மிட்செல் சாண்ட்னர், கரண் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் உறுதுணையாக இருப்பர். 

முதுகு வலி காயத்தால் ஜஸ்பிரீத் பும்ரா முதற்கட்ட ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது. இது சற்று பின்னடைவு.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வில் ஜேக்ஸ், பெவன் ஜேக்கப்ஸ், ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் அதிரடி காட்டுவர். 

இளம் வீரர்களான ராபின் மின்ஸ், விக்னேஷ் பதூர், ராஜ் பாவா ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, காயம்பட்ட சிங்கம் சிலிர்த்தெழும் என எதிர்பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in