health benefits of
health benefits of

புதினா, மணத்தக்காளிக் கீரை - நன்மைகள் என்னென்ன?

Updated on
2 min read

செரிமானத்துக்கு மிகவும் ஏற்ற புதினா கீரைதான் எல்லா வயதினருக்கும் ஏற்றது.  சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கும் பசியைத் தூண்டவல்லது.

வைட்டமின் ஏ, சி, ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ள புதினா கீரையில் இரும்புச் சத்தும் நார்ச்சத்தும் தேவைக்கு உள்ளன.

மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், குரோமியம் தாதுக்கள் கொண்ட புதினா கீரை, ரத்தசோகையைப் போக்கவும் மலச்சிக்கல்லை தீர்க்கவும் உதவும்.

புதினாவில் ‘மென்தால்’ எனும் வேதிப்பொருள் உள்ளது. இது சளியும் தடுமமும் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது கவனிக்க வேண்டிய விஷயம்.
 

மணத்தக்காளிக் கீரையில் வைட்டமின் ‘பி காம்ப்ளெக்ஸ்’ அதிகம் இருப்பதால் பொது உடல் ஆரோக்கியத்துக்கு இது மிக மிக நல்லது.

தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வந்தால், வாய்ப் புண்ணும் இரைப்பைப் புண்ணும் குணமாகும் சாத்தியம் அதிகம்.

ஓரளவுக்குப் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் உள்ள மணத்தக்காளிக் கீரை, ரத்தசோகை உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்.

மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது குழந்தைகள் சாப்பிட பழக்கப்படுத்து, அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in