alert for nail biter
alert for nail biter

நகம் கடிப்பவரா நீங்கள்? - ஹெல்த் அலர்ட்

Updated on
2 min read

நகம் கடிப்பது விடமுடியாத பழக்கம் ஆகிவிட்டலோ, நம்மை அறியாமலேயே நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாலோ உடனே ‘அலர்ட்’ ஆக வேண்டும்.

நமக்கு ஏற்படக் கூடிய பல்வேறு உளவியல் பிரச்சினைகள்தான் நகம் கடிக்கும் பழக்கத்தைத் தூண்டும். அதுவே மன அழுத்த நோய்க்குப் பாதை அமைத்துவிடும்.

நகம் சுத்தமாக இல்லை எனில், அதுவே நோய்களுக்கு வாசலாகிவிடும். நகம் கடிக்கும் பழக்கத்துக்கு ‘ஆனிகோஃபேஜியா’ (Onychophagia) என்று பெயர்.

மஞ்சள் காமாலை, டைபாய்டு, வாந்தி பேதி, சீதபேதி, அஜீரணம், குடல் நோய்கள் ஏற்படவும் நகம் கடிக்கும் பழக்கம் வழி அமைத்திடும் அபாயம் உண்டு.

சிலர் மிகவும் தீவிரமாக நகம் கடித்து, அதனால் புண் ஏற்பட்டு, ரத்தம் கசியும் அளவுக்கு போய்விடும். அப்போது அங்கு நோய்த் தொற்றும் ஏற்படலாம்.

தீர்வுகள் என்னென்ன? - நகத்தைச் சுத்தமாகக் கழுவி, ஒட்ட வெட்டிவிட வேண்டும். நகம் கடிக்கத் தோன்றும்போது, விரல்களுக்கு வேறு வேலை தரவேண்டும். 

நகம் மீது துவர்ப்புச் சுவை கொண்ட வர்ணத்தைப் பூசிக்கொள்ளலாம். அக்ரலிக் செயற்கை நகங்களைப் பொருத்திக்கொள்ளலாம்.

நகத்தில் பிளவுகள், தொற்றுகள் போன்றவை காணப்பட்டால், மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெற வேண்டும்.

நகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம். மனதை வாட்டும் பிரச்சினைகளுக்கு உளவியல் தீர்வு முக்கியம். | கைடன்ஸ்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in