Nocturnal and diurnal birds - a comparison
Nocturnal and diurnal birds - a comparison

இரவுப் பறவைகள் Vs பகல் பறவைகள் - ஓர் ஒப்பீடு

Updated on
2 min read

ஒரு பறவையின் செயல்திறனை வைத்து அவை பகல் பறவைகள், இரவு பறவைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
 

பகலில் பறத்தல், வேட்டையாடுதல்களைச் செய்யும் பறவைகளைப் ‘பகல் பறவைகள்’ என்றும் அதையே இரவில் செய்பவற்றை ‘இரவுப் பறவைகள்’ என்கிறோம்.

வண்ணமயமான இறக்கைகளைப் பகலில் உலவும் பறவைகளிடம் பார்க்கலாம். அவை தம் இணையைக் கவரவும், தனித்துவமாகக் காட்டவும் இவற்றைப் பயன்படுத்துகின்றன. 
 

நேரடியாகச் சண்டை இடாமல் தனது இறக்கையைக் அச்சுறுத்துவதாகவும், கம்பீரமாகவும் காட்டுவதன் மூலமும் எதிரியை விரட்டுவதற்கும் இறக்கையைப் பயன்படுத்துகின்றன. 
 

பறந்து கொண்டிருக்கும் போது நான் பறந்து வருகிறேன் என்பதை இறக்கையின் வண்ணத்தின் மூலம் தெரியப்படுத்தும் சில பறவைகளும் இருக்கின்றன.
 

சில பறவைகள் தாம் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப, மங்கலான நிற இறக்கைகளைத்தான் கொண்டிருக்கும். அதனால் அவை எங்கே ஒளிந்துகொண்டிருக்கின்றன கண்டறிய இயலாது.

பகலில் சூரிய வெப்பம் அதிகம் என்பதால் வெப்பத்தைத் தாங்கக்கூடிய உடல் அமைப்பு உடையதாகப் பகல் நேரப் பறவைகள் இருக்கும்.

அதே நேரத்தில் குளிர்ந்த அல்லது மிதமான வெப்ப நிலையில் தகவமைத்துக் கொண்டுள்ள பறவைகள் இரவு நேரப் பறவைகளாக இருக்கும். 

மெல்லிய இசையை இரவு நேரப் பறவைகளிடம் பார்க்க இயலாது. அவை பெரும்பாலும் கூச்சல், அலறல், விசிலைப் பயன்படுத்தி செய்திகளைத் தெரிவிக்கின்றன. 

இரவு நேரப் பறவைகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. மேலும் சுண்டெலி போன்றவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. | தகவல்கள்: பெ.சசிக்குமார்
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in